மரணமடைந்த காவலரின் குடும்பத்தை காத்த உதவும் கரங்கள் (2003-பேட்ச்)சக காவலர்கள்

554

மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய காவலர் தெயவத்திரு.ஜோதிராம்(40-வயது) 15.06.2020 மாலை மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பனங்காடி செக்போஸ்ட் அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு சத்தியா (33/2020), என்ற மனைவியும், சஸ்மிதா,மேகலக்ஷிதா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.மேலும் ஜொதிராமின் தாயார் உயிரிழந்து விட்ட நிலையில் அவரது தந்தை விவசாயம் பார்த்து வரும் இரண்டாவது சகோதரர் பராமரிப்பில் உள்ளார் என்பதை அறிந்த சக காவலர்கள் ஜோதியின் குழந்தைகளின் எதிர்காலம் எந்தவொரு சூழ்நிலையிலும் பாதித்துவிட கூடாது என்றும் அவர்கள் பெண் குழந்தகள் என்பதால் படிப்பு மற்றும் திருமணம் என இரண்டையும் கருத்தில் கொண்டு single Deposit + Death Coverage + Long term investment என்ற விதத்தில் அவர்களின் 21 -வது வயது வரை காப்பீடு செய்ய தீர்மானித்து உதவும் கரங்கள் -2003 பேட்ச் (5043 × 500) நண்பர்கள் குழு வழங்கிய தேவையான ரூபாய் 25,21,500 -ல் மூத்த மகள் கணக்கில் 6,93,051 – ம்,இளைய மகள் கணக்கில் ரூபாய் 5,81,547 – ம் , ஜோதிராமின் மனைவியின் பெயரில் 7,12,600 – ம் மாதம் 3,300 ரூபாய் பென்சன் கிடைக்கும் வகையில் எல்.ஐ.சி .யில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவரின் தந்தை பெயரில் 5,00,000 -ம் ரூபாய் மாதம் 3,083 ரூபாய் பென்சன் கிடைக்கும் வகையில் எல்ஐசி மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.மீதம் உள்ள 34,312 ரூபாய் ரொக்க பணம் மதுரையில் உள்ள வீட்டில் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.

மேலும் எல்.ஐ.சி.பாலிசியில் கிடைக்கவுள்ள கமிஷன் தொகையில் ஜோதிராமின் மனைவி இரு குழந்தைகளும் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 3,00,000/-மதிப்பிலான மருத்துவசிகிச்சை இலவசமாக மேற்கொள்ள ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் முதல் வருடத்திற்கு ரூபாய் 8,448/- க்கு பிரிமியம் செலுத்தப்பட்டதற்கான பத்திரம் நகல் இது 3 முதல் 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து புதுப்பித்து தரப்படும்.இதற்கான செலவு பங்களிப்பு தொகையில் சேராது.இதுதவிர மதுரை மாநகர் காவல்துறை சொந்தங்கள் சார்பில் உதவித்தொகையாக வழங்கப்பட்ட ரூபாய் 56,600/-க்கான காசோலை ஆகியவையும் அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.உதவிய கரங்கள், வழிகாட்டிய நம் நிர்வாகிகள் மற்றும் நமது காவல் சொந்தங்கள் அனைவருக்கும் நமது பங்களிப்பு நிகழ்ச்சியில் உரிமையுடனும்,உணர்வுடனும் பங்கு கொண்ட அனைவருக்கும் மதுரை மாநகர் காவல் சொந்தங்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here