
நியூஸ் 18.காம் நிறுவனத்தின் அசோசியேட் எக்ஸிகியூட் எடிட்டர் வினய் சரவாகி அனுப்பியது போன்று போலி மின்னஞ்சலை உருவாக்கி பரப்பியதற்காக யூ டியூபர் மாரிதாசுக்கு எதிராக மோசடி, நற்பெயருக்கு சேதம் மற்றும் ஐ.டி சட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளில் சென்னை சைபர் கிரைம் கிளை வழக்கு பதிவு செய்திருந்தது.
நியூஸ் 18 அமைப்பு அதன் ஊழியர்கள் மீது தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாகக் யூடியூபர் மாரிதாஸ் ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்திருந்தார். பின்னர் வினய் சரவாகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனது பெயரில் தயாரிக்கப்பட்ட போலி மின்னஞ்சல் தனது நற்பெயருக்கும் சேனலுக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதாக வினய் கூறியிருந்தார்.
சைபர் கிரைம் கிளை பிரிவு 465 (மோசடிக்கான தண்டனை), பிரிவு 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் பிரிவு 471 (போலி (ஆவணம் அல்லது மின்னணு பதிவைப் பயன்படுத்துதல்) பிரிவு 66 பி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் பிரிவு 43 கீழ் சில வாரங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் மதுரையில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சோதனை செய்த சென்னை போலீசார் அவருடைய லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆனையர் அலுவலகத்தில் மாரிதாஸ் விசாரனைக்காக ஆஜர் ஆனார்.