சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது…. தற்காலிகமாக மூடப்பட்டது மயிலாடுதுறை காவல் நிலையம்!

587

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 6 போலீசாரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

போலீசாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் நிலையம் நேற்று மூடப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து போலீசார் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்,
சுபாஷ் சந்திரபோஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here