
நாமக்கல் அடுத்த தாதம்பட்டி ஈச்சங்காட்டு புதூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்ற நிலையில் தங்களது வீட்டில் 5 வயது மகளை அருகில் இருந்த உறவினர் வீட்டில் விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது மகள் குளியலறையில் அழுது கொண்டிருந்துள்ளது. சிறுமியிடம் பெற்றோர் விவசாரித்த போது அவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் டேவிட்சன் என்ற இளைஞர் சிறுமியிடம் கொஞ்சி பேசி விளையாடி அதனை குளியலறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்து வன்கொடுமைக்கு முயற்சித்துள்ளார். சிறுமி அழ ஆரம்பத்தவுடன் தப்பி ஓடியது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு டேவிசடனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் – ம.ஜெகதீசன். 11.08.20
—