
திருச்சி ஆக 11
தமிழகத்தில் காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பணி செய்ய பற்றாக்குறை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் காவல்துறையில் பணி செய்யும் பலருக்கு நோய் தொற்றால் சிகிச்சையில் இருப்பதால் பணிபுரிய காவலர்கள் பெருமளவில் இல்லை. இந்நிலையில் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் A-B-C என்ற முறையில் காவல்பணி செய்ய காவல்துறை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டார். ஆனால் திருச்சி மாநகரத்தில் A-B SHIFTட்டால்
(A team 8 to 14 அதாவது
காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை)
(B team 14 to 21) மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை
பின்னர் A teamக்கு மீண்டும் இரவு பணி
(A team 21 to மறுநாள் 8 am ) முதல நாள் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை
( B team 8 to 14 )
இப்படி சுழன்று கொண்டே பணி செய்ய தங்களது உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்.
விடிவது கூட தெரியாமல் காவலர்கள் துயரபட்டு வருகின்றனர். ஆகையால் A- B -C முறை அமல்படுத்த வேண்டும் என்பதே காவலர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
அடுத்ததாக பயண படி, ETR முறையாக மாதந்தோறும் வழங்கபடுவதில்லை என குற்றசாட்டும் ஒரு புறம் எழுந்துள்ளது. மேலும், திருச்சி மாநகர சட்ட ஒழுங்கு பணிக்கு ஆயுதபடை காவலர்கள் விருப்ப மனு கொடுத்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் அனுப்பாத நிலையாக உள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்திற்கு பணி மாறுதல் வேண்டி விருப்ப மனு கொடுக்க தோன்றுகிறது ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் எங்களுடைய பிரச்சனைகளை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலையிட்டு தீர்க்கப்பட வேண்டும் என் சக காவலர்கள் கூறி வருகிறார்கள். கவனிப்பாரா? காவல் துறை ஆணையாளர் என்று திருச்சி மாநகர போலீசார் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
Trichy JK