
தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர், நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி வயது 35 பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்துள்ளது.
இவரது நண்பர் ராஜேஷ் வயது 37 பதுவஞ்சேரியை சேர்ந்தவர் இவருக்கும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளது.
நேற்று இரவு ரவி, ராஜேஷிடம் கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ராஜேஷ் கஞ்சா தராததால் அவரை ரவி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் வீட்டில் வைத்திருந்த கத்தியால் ரவியை குத்தியுள்ளார்.
இதில் கழுத்து உள்பட பல இடங்களில் காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்த ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.