
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோ.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி பேராங்குளம் மற்றும் காமராஜபுரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 11.08.2020 அன்று கணேஷ் நகர காவல் ஆய்வாளர் திருமதி.அழகம்மாள் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.குணசேகரன் அவர்கள் மற்றும் காவலர்கள் சென்று ஆய்வு செய்தபோது லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்ததையடுத்து லாட்டரி சீட்டு சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்தவர்களான 2 பேரை கைது செய்து, மேலும் அங்கிருந்த லாட்டரி சீட்டுகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, கணேஷ் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.