
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் உத்தரவின்படி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி.K.சரஸ்வதி மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் வேப்பூர்செக்கடி காட்டுப்பகுதியில் மதுவிலக்கு தேடுதல் வேட்டை நடத்தியதில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடித்துக் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சமுத்திரம் பகுதியில் 15லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த 1)செல்வி, வ/75, க/பெ. செல்வம், சமுத்திரம், திருவண்ணாமலை 2)வனிதா, வ/50, க/பெ. முருகேசன், சமுத்திரம், திருவண்ணாமலை 3)சகுந்தலா, வ/70, க/பெ. அன்பழகன், சமுத்திரம், திருவண்ணாமலை என்பவர்களை திருவண்ணாமலை மதுவிலக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.