
சிவகங்கையை சேர்ந்த ராஜசேகரன் இவருக்கு சொந்தமான ஹூண்டாய் I .10 காரை காளவாசலில் இருந்து புது ஜெயில் ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார்..

அப்பொழுது கரிமேடு மீன் மார்க்கெட் அருகே வரும்போது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்தது உடனடியாக காரை ஓரத்தில் நிறுத்தி பார்த்த போது தீ மளமளவென எரிய ஆரம்பித்தது உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை டவுன் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் எனினும் காரின் முன்பகுதி எரிந்தது முதற்கட்ட விசாரணையில் பேட்டரியில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது இதுகுறித்து கரிமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் பரபரப்பான சாலையில் தீ பற்றியது . அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்