வெடிமருந்து மற்றும் உரக்கடை உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவுப்படி அறிவுரை கூட்டம்.

533

அரியலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சுந்தரமூர்த்தி(குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு), திருமேனி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ஆகியோர் தலைமையில், துணை காவல்
கண்காணிப்பாளர் திருமேனி (அரியலூர்) முன்னிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள வெடி மருந்து குடோன் உரிமையாளர்கள் , விற்பனையாளர்கள் மற்றும் உரக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

உரம்மற்றும்மருந்துகுடோனில் அமோனியம் நைட்ரேட் உரம் வைத்திருக்கும் அறையின் பாதுகாப்பு குறித்து அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவுரைகள் காவல்துறையி
னரால் வழங்கப்பட்டன.அவற்றில்
சேமிப்பு கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக அமோனியா நைட்ரேட் உரத்தினை வைத்திருக்கக்கூடாது. அதன் அருகில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்திருக்கக் கூடாது.விற்பனை செய்யும் பொருட்களை ஒரே நபருக்கு அதிக அளவில் விற்கக் கூடாது. தீப்பற்றக்கூடிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.அதற்கானமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகள்எடுக்கவேண்டும். வெடிபொருட்களை மிகப் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் போன்றஅறிவுரைகளை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here