தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் – ஸ்கெச் போட்டு பிடித்த காரைக்குடி போலீஸ்

517

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக தொடர் திருட்டு மற்றும் வழிப்பறிகள் அரங்கேறி வந்தன.இதையடுத்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி.ரோகித்நாதன் உத்தரவின் பேரில் காரைக்குடி டி.எஸ்.பி.,அருண் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமகாலிங்கம், சுப்பிரமணியன், தேவகி, எஸ்.ஐ.,க்கள் தவமுனி, பார்த்திபன் அடங்கிய ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

தனிப்படையினர் நாமக்கல்லை சேர்ந்த வேலாயுதம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரை சேர்ந்த கணேஷ்குமார், ரவிச்சந்திரன், காரைக்குடி கழனிவாசல் காளையப்பா நகர் சிந்தரசு, கோவிலூர் பாபாஜான் உள்ளிட்ட 20 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புடைய 90 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் டி.எஸ்.பி., அருண் இன்று ஒப்படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here