Home தமிழ்நாடு பொள்ளாச்சி அருகே 5 கிலோ எடையுள்ள 8 சந்தன மரத்துண்டுகள் வெட்டிய நால்வருக்கு அபராதம்

பொள்ளாச்சி அருகே 5 கிலோ எடையுள்ள 8 சந்தன மரத்துண்டுகள் வெட்டிய நால்வருக்கு அபராதம்

0
பொள்ளாச்சி அருகே 5 கிலோ எடையுள்ள 8 சந்தன மரத்துண்டுகள் வெட்டிய நால்வருக்கு அபராதம்

பொள்ளாச்சி -ஆகஸ்ட் -13

பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குநர் நெல்சன் சேவியர் அவர்களது உத்தரவின் வனசரகர் புகழேந்தி தலைமையில் பிரிவு வனவர் மற்றும் வனப்பணியாளர்களுடன் ஆனைமலை செம்மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செம்மேடு வாய்க்கால் மேட்டில் இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் நின்று கொண்டிருப்பதைகண்டு அவர்களிடம் சென்ற போது தப்பியோட முயற்சித்தனர் அவர்களை விரட்டி பிடித்து சோதனை செய்ததில் கையில் வைத்திருந்த பையில் சுமார் 5 கிலோ எடையுள்ள 8 சந்தன மரத்துண்டுகள் இருப்பது தெரிய வந்தது நால்வரையும், கைப்பற்றிய சந்தன மரங்களுடன் ஆனைமலை பண்ணை அலுவலகம் கொண்டு வந்து விசாரித்ததில் இவர்கள் திவான் சாபுதூர் பகுதியை சார்ந்த ஜெயபால், ரெட்டியாரூர்ரை சார்ந்த காளிமுத்து, வெங்கடேஷ், , மீனாட்சிபுரம் குஞ்சுமேனாம்பதியை சார்ந்த தினேஷ் என தெரிய வந்தது விசாரணையில் மேலும் போடி பாளையத்தில் நடராஜ் என்பவர் வீட்டிலும், மாச்ச நாயக்கன்பாளையத்தில் வெற்றிவேல் என்பவர் வீட்டிலும், ஆத்துப்பொள்ளாச்சியில் ஒரு சந்தன மரமும் வெட்டியதை விசாரணையில் ஒப்புக் கொண்டனர். வழக்கு பதிவு செய்த வனத் துறையினர் பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குநர் நெல்சன் சேவியர் உத்தரவின் பேரில் நால்வரிடமும் இணக்கக்கட்டணமாக தலா ரூ. 22500 வீதம் மொத்தம் 90000 வசூலிக்கப்பட்டு நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here