
தாம்பரம், ஆக 14 :
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நிவேந்திரேன் (23).
சேலையூர் பகுதியில் தங்கி உணவு விடுதியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சேலையூர் ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் சேலையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிபடை அமைத்த போலிசார் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் இருந்த இருவரையும் அழைத்து வந்து பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் நிவேந்திரனை கைது செய்து தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இதனையடுத்து பதினெட்டு வயது பூர்த்தியடையாத பெண்னை திருமணம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நிவேந்திரனை சிறையில் அடைத்தனர்.