
குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 மாவட்டங்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி நெல்லை மாவட்டம் மானூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் குமரி மாவட்டம் புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இதே போல தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், பசுந்தனை இன்ஸ்பெக்டர் மணிமொழி, தக்கலை மதுவிலக்கு அமல்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும் களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவர்ணலதா மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்புக்கும், தக்கலை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா களியக்காவிளைக்கும், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பார்வதி ஆரல்வாய்மொழிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.