மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 74 வது சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது

237

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 74 வது சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து 74 வது சுதந்திர தின விழாவினை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கொண்டாடினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு மற்றும் தேசிய கொடி ஏற்றினர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன் தேசிய கொடியேற்றினார்.
உதவி கமாண்டன்ட் சனிஸ்க் தேசிய கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

சமூக இடைவெளியுடன் கூடிய முக கவசம் அணிந்த 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here