திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி பிரிவு அருகே சைக்கிளும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சொக்கநாதன் பாளையத்தை சேர்ந்த அப்துல் அக்கீம் வயது (55) உயிரிழந்தார். தாராபுரம் தனியார் ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்த இவர் இன்று காலை 6 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பிச்சென்ற ஆசாமியை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலமாக பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்..
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்சாதிக்