Home தமிழ்நாடு தாம்பரம் அருகே தொலைகாட்சி பெட்டி விழுந்து 3 வயது குழந்தை பலி.. போலிசார் விசாரணை

தாம்பரம் அருகே தொலைகாட்சி பெட்டி விழுந்து 3 வயது குழந்தை பலி.. போலிசார் விசாரணை

0
தாம்பரம் அருகே தொலைகாட்சி பெட்டி விழுந்து 3 வயது குழந்தை பலி.. போலிசார் விசாரணை

தாம்பரம், ஆக 18 :

சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பாலாஜி.
இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
இதில் இரண்டாவது ஆண் குழந்தையான கவியரசு (3) நேற்று இரவு கப்போர்டில் உள்ள தொலைகாட்சி பெட்டியின் மீது இருந்த செல்போனை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது தொலைகாட்சி பெட்டி சிறுவனின் தலையில் விழுந்தது.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர்.
சிறுவனை மீட்டு ஆம்பலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக சேலையூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here