
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடப்பது தொடர்பாக பெருங்குடி காவல் நிலையத்திற்கு புகார் வந்தது இதுதொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை
தேடிவந்தனர்.
இந்நிலையில் பனையூர் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 20)
விக்னேஸ்வரன் (வயது 19) ஆகிய இருவரும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வரும் நபர்களை தாக்கி செல்போன் மற்றும் பணம் ஆகியவை பறித்து சொல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பெருங்குடி போலீசார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்