
வேலூர் மாவட்டம்
செய்தியாளர் டேவிட்
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக வேலூர் தனியார் மண்டபத்தில் மாவட்ட இந்து முன்னணி மற்றும் விழாக்குழுவினருடனான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார் . எஸ். பி பிரவேஷ்குமார் , டி ஆர் ஓ பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .ஆர்டிஓ கணேஷ் வரவேற்றார்.



அப்போது கூட்டத்தில் இருந்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ், விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த அனுமதி கொடுத்தால், சுமார் 4,5 பேருடன் சமூக இடைவெளியை கடைபிடித்து கொண்டாடுவோம். இல்லாவிட்டால் தடையை மீறி வழிபாடு நடத்தி சிறை செல்லவும் தயார் என்றார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை பாதித்தால் நாம் விழா கொண்டாடாமல் இருப்பதுபோல், இந்த கொரோனா பரவல் காலத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடாமல் கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்.

இதையடுத்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு தீபாவளி, பொங்கல் கொண்டாடுவதுபோல் விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்கள் இருப்பினும் உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கையாக அனுப்புகிறோம் என கலெக்டர் கூறினார். கூட்டத்தில் தாசில்தார்கள், டிஎஸ்பிக்கள் உட்பட பலர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.