
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்படாமல் அவசியமின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது இன்று 17.08.2020 33 வழக்கு பதிவு செய்யப்பட்டு 108 நபர்கள் கைது செய்யப்பட்டு 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மேலும் 25.03.2020 தேதி முதல் 18.08.2020ம் தேதி வரை சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் 13437 வழக்கு பதிவு செய்யப்பட்டு 18160 நபர்கள் கைது செய்யப்பட்டு 6351 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அவசியம் இல்லாமல் சுற்றித் திரிந்தாலோ அல்லது கூட்டமாக கூடியிருந்தாலோ அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.சி.சக்தி கணேசன், இ.கா.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.