Home தமிழ்நாடு பெரம்பலூா்: பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

பெரம்பலூா்: பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

0
பெரம்பலூா்: பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், புகாா்தாரா்கள் மற்றும் விசாரணைக்கு வரும் தாய்மாா்கள், கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக விசாரணைக்கு வரும் நபா்களின் குழந்தைகள் தனியாக விளையாடும் வகையில், காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டு மையம் அமைக்க தமிழக அரசு ரூ. 56 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உள்ள அறையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டு மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் திறந்து வைத்து பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், காவல் துறையினா் பலா் பங்கேற்றனா்.

2ஆவது முறையாக திறப்பு: குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் கொண்ட குழந்தைகள் விளையாட்டு மையத்தை, திருச்சி சரக காவல் துணைத் தலைவராக பணிபுரிந்த பாலகிருஷ்ணன் கடந்த 13.9.2019-இல் திறந்து வைத்தாா்.

திறக்கப்பட்ட நாளிலிருந்து விளையாட்டு மையம் செயல்படாததால், அதே அறையில் மீண்டும் 2ஆவது முறையாக குழந்தைகள் விளையாட்டு மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here