மதுரை கொலை செய்ய பதுங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்த முதல்நிலை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

275

கடந்த 16.08.2020 ம் தேதி மதுரை காமராஜர் சாலை வைகை தென்கரையோர சந்திப்பில் B3-தெப்பக்குளம் காவல் நிலைய பகுதியில் PATROL- II நான்கு சக்கர வாகனத்தில் காலையில் பணியில் இருந்த முதல்நிலை காவலர்கள் Gr.I.PC 1663, திரு.சங்கர்குரு மற்றும் Gr.I.PC 3043, திரு.செல்வம் ஆகிய இருவரும் ரோந்து பணியில் இருந்த போது TN59 BE 4268 என்ற ஆட்டோவில் சந்தேகப்படும்படியாக இருந்த நான்கு நபர்களை விசாரணை செய்தபோது 1.வாசுதேவன் 23/2020, த/பெ.முனியாண்டி, காமராஜபுரம், மதுரை. 2.அருள்முருகன் 25/2020, த/பெ.ராமர், எம்.ஜி.ஆர் நகர், மதுரை. 3.முகமது அசாருதீன் 26/2020, த/பெ. பக்கீர், சிலைமான், மதுரை மாவட்டம். 4. வேலுச்சாமி 55/2020, த/பெ.பெரியகருப்பன் , எம்.ஜி.ஆர் நகர், மதுரை. என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நான்கு நபர்களும் சேர்ந்து ஒரு நபரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியது தெரிய வந்தது. எனவே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 வாள்கள் மற்றும் ஒரு அரிவாள் கைப்பற்றப்பட்டது. முதல்நிலை காவலர்களின் மெச்சத்தகு பணியை பாராட்டி இன்று (18.08.2020) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., அவர்கள் நேரில் அவர்களை வரவழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்து பண வெகுமதியும் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here