மாவட்ட காவல் துறை சார்பில் சிமெண்ட் நிறுவன அலுவலர்கள் மற்றும் கனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரை கூட்டம்

204

அரியலூர் மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலையில்
இன்று சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இயக்க வேண்டும்.
கனரக வாகனங்களுக்கு முறையான கனரக வாகனங்கள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கனரக வாகனங்களின் பெயர் பலகை மற்றும் பதிவு எண் போன்றவை தெளிவாக தெரிய வேண்டும். கனரக வாகனங்களில் அதிகம் பாரம் ஏற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் தார்ப்பாய் மூலம் கட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மீறும் ஓட்டுநர்கள் மீதும் ,நிர்வாகத்தின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். போதைப் பொருட்கள் பயன்படுத்தும் ஓட்டுநர்களை பணியிலிருந்து நீக்கி நல்ல தகுதியான நபர்களை பணியில் அமர்த்த வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக ஒளிரும் பட்டைஒட்டிஇருக்கவேண்டும்.வாகனங்களில்கண்கூசும்விலங்குகளை பயன்படுத்த கூடாது. வாகனம் ஓட்டும் பொழுது கண்டிப்பாக ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது மீறும் பட்சத்தில் ஓட்டுனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
V.R.ஸ்ரீனிவாசன் ஆலோசனை வழங்கினார்.

இதன்பின்னர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து கனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலையில் செல்லும் வாகனங்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி அதை திருத்திக் கொள்ளுமாறும் ,அதன்படி நடப்பதன் மூலம் விபத்து நிகழாது என்றும் அரியலூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் விளக்கினார்.

இதனைத்தொடர்ந்து கனரக வாகன உரிமையாளர்கள் அரியலூர் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் விளக்கப்பட்டு, பின்பு போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படமும் காண்பிக்கப்பட்டு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலர். செல்வராசு , சிமெண்ட் ஆலை அலுவலர்கள், உள்ளிட்டோர் அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற துணை நிற்போம் என்று உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here