
அரியலூர் அருகே கயர்லபாத் ஊராட்சியில், அரியலூர் மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் கொரோனா ஊரடங்கால் மிகவும் பாதிப்படைந்துள்ள ஊராட்சி
தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்பு அரியலூர் மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர் சங்க இணைச் செயலாளர் ராஜ் (என்கின்ற) நாகமுத்து தலைமையில் நடைபெற்றது .ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், அதிமுக மாவட்ட பிரதிநிதி ரவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் .இதில்
கயர்லாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 250 மேற்பட்டோருக்கு அரிசிப் பைகளை வழங்கினார். இதனையடுத்து அங்கு கூடியுள்ள பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்தும், அவற்றிலிருந்து பொதுமக்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைவாணன் ,கிளை செயலாளர் லெனின்குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.