
தூத்துக்குடி மாவட்டம் ,வல்லநாடு அருகே ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் என்பவரின் உருவ படத்திற்கு இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் முதலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் உடனிருந்த மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமேனி(மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) ,சுந்தர மூர்த்தி (குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு), மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் கபூர் (மாவட்ட குற்ற பதிவேடு ), மற்றும் அரியலூர் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று அரியலூர் , கயர்லாபாத் உடையார்பாளையம் மற்றும் அரியலூர் மாவட்டத்திலுள்ள பிற காவல் நிலையங்களிலும் காவலரின் உருவப்படத்திற்கு காவல்
துறையினர் மலரஞ்சலி செலுத்தினர்.


