
அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமிழியம் கிராமத்தில் உள்ள பூமரத்தான் ஏரியை சுற்றி “மரங்களின் நண்பர்கள் குழு” சார்பில் இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அக்குழுவின் வேண்டுகோளினை ஏற்று அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , மரக்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.பின்னர் மரங்களின் நண்பர்கள் குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் சமூக இடைவெளியை கடைபிடித்து ஏரியைச் சுற்றி 50 மரங்கள் நட்டனர். இந்நிகழ்ச்சியில் சோலைவனம் அமைப்பினர் குழுவும் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முகக் கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பதன் அவசியம் குறித்து, கொரோனா குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக பிடிஓ சிவாஜி, உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார், உதவி ஆய்வாளர் ரமேஷ் , அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

