Home தமிழ்நாடு பெண்களின் வாழ்க்கையை சீரழித்து உல்லாச வாழ்க்கை.. பல நாள் திருடன், ஆட்டாம்புழுக்கையாக அகப்பட்ட சோகம்.!!

பெண்களின் வாழ்க்கையை சீரழித்து உல்லாச வாழ்க்கை.. பல நாள் திருடன், ஆட்டாம்புழுக்கையாக அகப்பட்ட சோகம்.!!

0
பெண்களின் வாழ்க்கையை சீரழித்து உல்லாச வாழ்க்கை.. பல நாள் திருடன், ஆட்டாம்புழுக்கையாக அகப்பட்ட சோகம்.!!

சென்னையில் உள்ள வேப்பேரி காவல்துறை நிலையத்தில், பல வழக்குகளின் கீழ் தேடப்பட்டு வந்த மோசடி மன்னன் தினேஷ். தற்போது இவனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தினேஷ் கைதான செய்தியை அறிந்த நபர்கள், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் வழங்க அடுத்தடுத்து குவிந்தனர். இவன், முகநூலில் பெண்களிடம் பழக்கத்தை ஏற்படுத்தி, குடும்ப நண்பர் போல முதலில் அறிமுகமாகுவான். பின்னர், அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை ஏமாற்றிவிட்டு மாயமாகிவிடுவான். இவ்வாறாக கீழ்பாக்கம் பகுதியை சார்ந்த பெண்ணிடம் ஐபோன் வாங்கி விற்பனை செய்யலாம் எனக்கூறி ரூ.2.5 இலட்சமும், திருவெல்லிக்கேணியில் 30 சவரன் நகையும், விமான நிலையத்தில் பணிவாங்கி தருகிறேன் என்று பண மோசடியும் செய்துள்ளான். இதனைப்போன்று பணிவாங்கி தருவதாக கூறிய காமுகன், சில பெண்களை தனது வலையில் விழ வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் அம்பலமாகியுள்ளது. பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துவிட்டு, பின்னர் அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கையை தலைமறைவாக வாழ்வதையும் இவன் வழக்கமாக கொண்டுள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. Tamil online news Today News in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here