மதுரை சிம்மக்கல் பகுதியில் நூற்றாண்டு பழமையான பேச்சியம்மன் படித்துறை அருகே ஸ்ரீ பேச்சியம்மன் கோவில் செயல்பட்டு வருகிறது, இந்த கோவிலில் வளாகத்தில் நேற்று இரவு புகுந்த மர்ம கும்பல் கோவிலில் இருந்த அய்யனார், பொன்னர்-சங்கர், பிள்ளையார் ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளது,காலை கோவில் திறந்த பூசாரி கோவிலில் இருந்த சிலை திருடபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து திலகர் திடல் காவல்துறையினருக்கு அளித்த புகார் அளித்துள்ளார், அதன் அடிப்படையில் சம்பவத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கோவிலின் பூசாரி பேச்சிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்,நூற்றாண்டு பழமையான கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


