
வேலூர் மாவட்டம் செய்தியாளர் டேவிட்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 20-ந் தேதி வேலூர் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
டி.ஐ.ஜி காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
முதலமைச்சர் வருகையின்போது ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முதலமைச்சர் பங்கேற்கும் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடப்பதால் அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களில் முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.