சோழவந்தான் காவல் நிலையத்தில் தூத்துக்குடி அருகே ரவுடி வெடிகுண்டு வீசி தாக்குதலில் பலியான காவலருக்கு அஞ்சலி செலுத்தினர்

152

தூத்துக்குடி மாவட்டம் எல்லையான நெல்லை அருகே உள்ள வலநாட்டை அடுத்து மணக்கரை மலை அடிவார பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவுடி துரைமுத்து தனது கூட்டாளியுடன் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் சம்பவ இடத்திற்கு தனிப்படை சுற்றிவளைத்தனர் அப்போது துரைமுத்து தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை தூக்கி திடீரென்று போலீசார் மீது வீசினார். அந்த குண்டு போலீஸ்காரர் சுப்பிரமணியன் 26 தலையில் விழுந்து வெடித்தது இதனால் அவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் கிராமத்தில் ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர்  வெடிகுண்டு வீச்சில் பலியான சுப்பிரமணியனுக்கு சோழவந்தான் காவல் நிலையத்தில் அவருடைய படத்தை வைத்து இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், ராஜா,தலைமைக் காவலர்கள் சுந்தரபாண்டியன் உள்பட போலீசார் அஞ்சலி செலுத்தினார்கள்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here