ஆம்பூர் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது. அவர்களிடம் இருந்து 12 செல்போன்கள் பறிமுதல்

67

வாணியம்பாடி ஆக 20 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதி டாஸ்மாக் கடைகள் அருகே நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் சொல்பவர்களை குறிவைத்து தொடர்ந்து செல்போன்களை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர் கதையாக இருந்து வந்தது.

இந்நிலையில் ஆம்பூர் அடுத்த வடகரை டாஸ்மாக் கடை அருகே செல்போன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற கார்த்திக் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், செல்போன் கொள்ளையடித்து சென்று வாணியம்பாடி பகுதியை சேர்ந்த கோபி மற்றும் கண்ணன் ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெயர்யா வந்தது. இதனை தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாணியம்பாடி பகுதியை சேர்ந்த கார்த்திக், வெங்கடேசன், கண்ணன், கோபி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்துனர்.

சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here