திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயன்ற அனுமன் சேனா நிர்வாகிகள் 11 பேர் உள்ளிட்ட மூன்று விநாயகர் சிலைகளை சிறை பிடித்த திருப்பங்குன்றம் போலீசார்.

409

மதுரை (21. 08. 20)
திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைப்பதற்காக அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் . ராமலிங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேர் டாட்டா ஏசி எனும் சரக்கு வாகனத்தில் 9 அடி விநாயகர் சிலை மற்றும் 3 அடி விநாயகர் சிலை 2 சிலைகளுடன் ஊர்வலமாக திருப்பரங்குன்றம் பாதையில் புறப்பட்டு சென்றனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் மதன கலா மற்றும் போலீசார் ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரையும்,

மூன்று விநாயகர் சிலைகளுடன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here