அரியலூர் மாவட்டம் குவாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடையக்குறிச்சி கிராமத்தில் இடையக்குறிச்சி பசுமை கிராமம் நண்பர்கள் குழு சார்பில் இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அக்குழுவினர் வேண்டுகோளை ஏற்று அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , மரக்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்று மரக்கன்று நடும் விழா சிறப்பாக தனி மனித இடைவெளிவுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரம் வளர்ப்பதன் பயன்கள் மற்றும் கொரோனாகுறித்துபொது
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
