பெரம்பலூரில் 5 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

88

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் போலீஸ்நிலையத்தில் பணிபுரிந்துவரும் போலீசார் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் நகரை சேர்ந்த 3 பேர் மற்றும் கிராமிய பகுதிகளான கவுல்பாளையம், தண்ணீர்பந்தல், சிறுவாச்சூர், கோனேரிபாளையம், கல்பாடி, குரும்பலூர், கே.புதூர், மேலப்புலியூர், காரை, வரகுபாடி, கொளக்காநத்தம், அருணகிரிமங்கலம், வெங்கலம், பிம்பலூர், பூலாம்பாடி, குன்னம், வேப்பூர், திருமாந்துறை, முருக்கன்குடி, ராமங்லிங்கபுரம், புதுவேட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்து 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 849 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 14 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். 253 பேர் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சேலம், சென்னை, புதுக்கோட்டை, சிறுவாச்சூர், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here