மதுரை அருகே கொள்ளை, கொலை சம்பவம் தொடர்புடையவர்கள் ஆயுதங்களுடன் கைது செய்தனர்

1013

இன்று 22.08.2020ம் தேதி D2 செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. N.கணேசன் என்பவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சின்னப்பாண்டி, தலைமை காவலர் 1228 சிதம்பரம், தலைமை காவலர் 2772 ரவி மற்றும் காவலர் 2395 சிலம்பரசன் ஆகியோருடன் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து செய்து மதுரை டவுன் தத்தனேரி CSI கல்லறை தோட்டம் அருகில் சென்ற போது கல்லறை தோட்டத்தின் உள்ளே நுழைவு வாயில் அருகே மேற்கு பக்கம் உக்காந்திருந்த போலீஸ் பார்ட்டியை பார்த்ததும் ஓட முயற்சித்த செல்லூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே சரித்திர பரிவேடு பராமரிக்கப்பட்டு வரும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளான 1)மீன்முள்முத்துப்பாண்டி @ முத்துப்பாண்டி 20/2020, த/பெ ராமலிங்கம், 782, அனுமார்மானுவம், பாரதி நகர், தத்தனேரி, மதுரை 2) முட்டைக்கண் மகாராஜா என்ற மகாராஜா 21/2020 த/பெ முருகேசபாண்டி 72A, பாரதிநகர் 1வது தெரு, தத்தனேரி மெயின்ரோடு, மதுரை. 3)ஸ்டாலின் 40 த/பெ தனிக்கொடி 132, பாரதிநகர் மெயின்ரோடு, தத்தனேரி, மதுரை. 4)செல்வம் 26/20 த/பெ அலெக்ஸாண்டர் பாக்கியநாதபுரம் கோவிந்த் டீகடை அருகில் தத்தனேரி மதுரை ஆகியோர்களை
சோதனை செய்ய மீன்முள்முத்துப்பாண்டி என்பவர் ஒரு நீளமான அருவாள் தனது முதுகில் மறைத்து வைத்திருந்ததும், மகாராஜா என்ற முட்டைக்கண்ணு மகாராஜா ஒரு பெரிய கத்தியை தனது முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருந்ததும், ஸ்டாலின் ஒரு கத்தியை தனது இடுப்பில் மறைத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. இந்திய அரசால் ஆயுத சட்டத்தின் கீழ் வரைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு மற்றும் வேளாண் பயன்பாட்டிற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கொலை மற்றும் குற்ற சம்பவம் செய்வதற்காக ஆயுதங்களை வைத்திருந்ததால் அவர்களை கைது செய்து விசாரித்தபோது அவர்கள் கடந்த 2018ம் வருடம் தத்தனேரியைச் சேர்ந்த ஒரு நபரை வெட்டி கொலை செய்தது மற்றும் பணம் நகைக்காக ஒரு சிலரை வெட்டி காயப்படுத்தி கொள்ளையடித்தது போன்ற குற்ற வழக்குகள் தங்கள் மீது நிலுவையில் இருந்து வருவதாகவும் அந்த வழக்கு செலவிற்காகவும் தங்களது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் வைகை வடகரை அம்மா பாலம் அருகில் சென்று அவ்வழியாக வரும் யாரிடமாவது கொள்ளையடிக்கலாம் என நினைத்து ஆளுக்கொரு அருவாள் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு இருந்ததாகவும் ஒப்புக் கொண்டனர்.எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து அருவாள் சக்தி மிளகாய்ப்பொடி பாக்கெட் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
கொலைக்கருவியான ஆயுதங்களை வைத்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நான்கு நபர்களும் ஆயுதங்களை தங்கள் வசம் வைத்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய குற்றத்திற்காக அவர்கள் மீது செல்லூர் காவல் நிலைய குற்ற எண்.2138/2020.U/s.25(1-A) ஆயுதங்கள் சட்டம் 1959 & 398 IPC ன் படி வழக்கு தொடரப்பட்டது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here