சென்னை விமான நிலைய தலைமைக் காவலர் முருகன் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் குடும்பத்திற்கு பரங்கிமலை காவலர் குடியிருப்பு காவலர்கள் 182 குடும்பத்தினர் சேர்ந்து ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை முருகன் மனைவியிடம் வழங்கினார்கள்.
சென்னை புனித தோமையர்மலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த விமான நிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த முருகன் என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 31.07.20 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு ஒரு மகனும் (17) மகளும் (18) உள்ளனர். அவரின் குடும்ப சூழ்நிலை அறிந்த புனித தோமையார் மலை குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் 182 பேர்கள் ஒன்றிணைந்து ரூ1,49,920/- உதவி தொகை வசூல் செய்து அவரது மனைவியிடம் (19.08.20) மாலை ஒப்படைத்தனர்.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு காவலர் குடியிருப்பில் இருந்து காவலர்கள் இழப்பிற்கு உதவித்தொகை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
எனவே இது போல கொரோனா காலங்களில் கடுமையாக போராடி வரும் பணி செய்துவரும் காவலர்கள் இது போன்ற நற்பணிகளை செய்து வருவது பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.