Home தமிழ்நாடு திருவள்ளூர் அருகே குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்ட காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

திருவள்ளூர் அருகே குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்ட காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

0
திருவள்ளூர் அருகே குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்ட காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை இஸ்லாம் நகரைச் சேர்ந்த பாபு என்கிற முபாரக். இவர் சோளிங்கரில் கறிக்கோழி கடை நடத்திவருகிறார். இவரது மனைவி சோபியா. இவர்களுக்கு பர்வேஸ்(9),ரிஷ்வந்த் (6)அசாருதீன் (3) ஆகிய மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அசாருதீன் திடீரென மாயமானார். இதனிடையே சிறிது நேரத்தில் முபாரக் கைப்பேசியை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் குழந்தையை கடத்தியுள்ளதாகவும், குழந்தையை ஒப்படைக்க வேண்டுமானால் ஒரு கோடி ரூபாயை தயார் செய்யுமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த குழந்தையின் பெற்றோர் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரை கேட்ட காவல் ஆய்வாளர் சுரேந்திர் குமார் உடனடியாக போலீசாரை உஷார் படுத்தினார். திருத்தணி டிஎஸ்பி குணசேகரனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் போலீஸார் ஆர்.கே.பேட்டை விரைந்தனர். மர்ம நபரின் எண்ணை வைத்து தேடுதல் வேட்டை ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்க, சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனையறிந்த மர்ம நபர் அச்சத்தில் கடத்தப்பட்ட குழந்தையை ஆர்கே பேட்டை அருகே வங்கனூர் கூட்டு சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

குழந்தை தனியாக அழுது கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டனர். விசாரணையில் குழந்தையை கடத்தியவர் முபாரக்கின் உறவினர் சுலைமான் என்பது தெரியவந்தது. தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தையை இரண்டு மணி நேரத்தில் மீட்ட காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here