மணப்பாறை அருகே காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..

129

இருவேறு சமூகத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் காதல் திருமணம் செய்து கொண்ட பின் மணப்பாறை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை போடுவார் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சம்பத். இவர் மொண்டி பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பத்தும், பழைய கோட்டையை சேர்ந்த பொன்னுசாமி மகள் ராதிகாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ராதிகா- சம்பத் இருவரும் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி தனது நண்பர்கள் முன்னிலையில் திருமணஞ்சேரியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் ஆகஸ்ட் 21ம் தேதி மதியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த இரு வீட்டாரின் சமூகத்தினரும் காவல் நிலையத்தில் வந்து அவர்களை பிரித்து செல்ல முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் உரிய பாதுகாப்பு அளிக்கிறோம் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here