தாம்பரம் அருகே வீட்டில் மயங்கி விழுந்து பெண் காவலர் பலி

153

தாம்பரம், ஆக 24 :

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை அருகே உள்ள நெடுங்குன்றம், கருமாரியம்மன் 2வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (33).
இவர் நெடுங்குன்றம், என்.எஸ்.ஜி கமாண்டோ பயிற்சி மையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சத்தியலட்சுமி (29).
இவர் ஆயுதப்படை பெண் காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சத்தியலட்சுமி வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கண்ணன் – சத்தியலட்சுமி தம்பதியருக்கு லிங்கம் தனிஷ்கா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here