9 வயது சிறுமிக்கு .. “14 வயது சிறுவனால் நேர்ந்த கொடூரம் “…அதிர்ச்சி சம்பவம் .. !!

146

9 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததால் பாதிக்கப்பட்ட சிறுமி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர்கள் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுவன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் கூறுகையில்: “தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது புகார் கொடுத்துள்ளதாகவும், என் மகளின் நிலை எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது என்று கண்ணீருடன் கூறினார். பின்னர் அச்சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். 14 வயது சிறுவன் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பட்டுகோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here