மதுரை அருகே குடிபோதையில் மோதல் வாலிபர் கொலையில் கொலை நடந்த .24 மணி நேரத்துக்குள் 5 பேர் கைது

181

குடிபோதையில் மோதல் வாலிபர் கொலையில் கொலை நடந்த .24 மணி நேரத்துக்குள் 5 பேர் கைது….. மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் வயது 30 இவர் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரப்பாளையம் பிள்ளைமார் தெரு வைகை ஆற்று ஓரத்தில் பொது கழிப்பறை வாயிலில் நண்பர்கள் பொன்னாங்கண்ணி உள்ளிட்டோர் 6 பேர்.மது அருந்தி கொண்டு இருந்தார்… அப்பொழுது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பார்த்திபனை கொலை செய்துவிட்டு தப்பினர் இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரிமேடு காவல் ஆய்வாளர், பாலமுருகன் தலைமையிலான தனிப்படை வந்தனர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் இக்கொலை தொடர்பாக பார்த்திபனின் நண்பர்கள். பொன்னாங்கன் என்கின்ற சங்கர மணிகண்டன். அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துவின் மகன் கோபி என்கின்ற கோபாலகிருஷ்ணன் . கரிமேடு சேர்ந்த கணேசன். மகன் பாலாஜி மற்றும் ,17 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறார்களும். இக் கொலையில் கைது செய்யப்பட்டனர், கொலை நடந்து 24 மணி நேரத்திற்குள். குற்றவாளியை கைது செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை, மேற்கொண்டு வருகிறார்கள். செய்தியாளர் வி காளமேகம் மதுரை. மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here