



சென்னை அடையாரில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளியில் பணிபுரிந்து வந்த திரு.ஜோனதன் பிரான்சிஸ் (53) காவல் ஆய்வாளர் அவர்கள், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 24.08.2020 அன்று உயிரிழந்தார்.
இன்று 25.08.2020, மருதம் கமாண்டோ பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K.திரிபாதி, இ.கா.ப., அவர்கள், தமிழக கமாண்டோ (ஆப்ரேசன்ஸ்) கூடுதல் காவல் இயக்குநர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப., கூடுதல் காவல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு.ஜெயந்த் முரளி இ.கா.ப.,அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் தொடர்ந்து காவல் ஆளிநர்கள் வரை மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.