சென்னையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு செய்த 19 வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

87


சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி வண்ணாரப்பேட்டை துணிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே பகுதியில் மற்றொரு துணிக்கடையில் பணிபுரியும் யுவராஜ் என்ற இளைஞரை, சிறுமி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர் கொத்தனார் வேலைக்கு சென்ற நிலையில் 17 வயது சிறுமி கடந்த 19ம் தேதி மயாமானதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகரில் இளைஞர் யுவராஜ் உடன் சிறுமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி யுவராஜ் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here