Home தமிழ்நாடு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

0
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் வெங்கட்ராமன் என்பவர் கடந்த 15-ம் தேதியில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இறந்தவரின் குடும்பத்திற்கு உதவும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் ஒன்றிணைந்து நிதி திரட்டி இறந்த காவலரின் மனைவி லிவினா அவர்களுக்கு ரூபாய். இரண்டு லட்சத்து 40 ஆயிரம் தொகையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜன் அவர்கள் இன்று வழங்கினார். இதேபோல் கடந்த 19-ம் தேதியில் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிவந்த காவலர் செந்தில் வாகன விபத்தில் மரணம் அடைந்தார் அவருடைய மனைவிடம் உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் சீனிவாசன் மேகலா மற்றும் தமிழ்மணி ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here