


மதுரை மாநகரில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் செல்போன் பாதிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர் இந்தநிலையில் நேற்று முன்தினம் வாகன சோதனையின் போது
ராஜ்குமார், த/பெ.செல்லபாண்டி, அய்யர் தோப்பு, E.B.மெயின் ரோடு, பைகாரா, மதுரை. என்பவர் திருநகர் 1 வது பஸ் ஸ்டாப்பில் ரியா என்ற பெயரில் மொபைல் போன் கடை வைத்திருப்பதாகவும் கடந்த 20.08.2020 ம் தேதி இரவு 08.00 மணிக்கு கடையை இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டிவிட்டு வீட்டிற்கு போய்விட்டதாகவும் 21.08.20ம் தேதி காலை 09.25 மணிக்கு கடையை திறக்க வந்த போது இரண்டு பூட்டுகளையும் காணவில்லை எனவும் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 6 செல்போன்கள் 5 மெமரி கார்டுகள் பணம் ரூ.10110/- யை காணவில்லை எனவும் கடையிலிருந்த CCTV கேமரா வயர்கள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து கொடுக்க வேண்டுமென கொடுத்த புகாரை பெற்று 21.08.20ம் தேதி W1-திருநகர் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் நிலைய குற்ற எண்: 797/2020, பிரிவு 457, 380 IPC படி வழக்கு பதிவுசெய்தார்.காவல் ஆய்வாளர் திருமதி.நாகராணி அவர்களின் முழு முயற்சியால் திருட்டு நடந்த இடத்தில் கிடைத்த கைரேகையை பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்க்கும்படி கைரேகை நிபுணருக்கு கடிதம் எழுத அறிவுறுத்தினார். கைரேகை நிபுணர்கள் பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்ததில் இருவரின் கைரேகையும் ஒத்துப்போவதாக அறிக்கை சமர்பித்தனர். பின்னர் திருட்டு வழக்கில் ஈடுபட்டது வைரவேல் 20/20, த/பெ.முருகன், பாரிதெரு, தாசில்தார் நகர், மதுரை மற்றும் முத்துவேல் 20/20, த/பெ.முருகன், பாரிதெரு, தாசில்தார் நகர், மதுரை ஆகிய இருவர்தான் என விணாரணையின் முடிவில் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு மதுரை மாநகரில் அண்ணாநகர் சரகத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் அவர்களை இன்று 24.08.2020 கைது செய்து அவர்களிடமிருந்து 4 செல்போன், 1 மெமரிகார்டு, 1 பென்டிரைவ் கைப்பற்றப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்