வீரமரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் சென்று காவல்துறை சார்பாக ஆறுதல்

154

வீரமரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் சென்று காவல்துறை சார்பாக ஆறுதல்

வீரமரணமடைந்த காவல்துறை வீரர் சுப்பிரமணியன் வீட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு காவல்துறை சார்பாக ஆறுதல் கூறி, ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்தார்.

கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் வீரமரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் வீட்டிற்கு இன்று (25.08.2020) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று, காவல்துறை சார்பாக தனது ஆழ்நத இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து, அவருடைய இழப்பு அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும், நீங்கள் எப்படி அவரை இழந்து மீளாத்துயரில் இருக்கிறீர்களோ, அதே போன்று காவல்துறையில் நாங்கள் எங்கள் உடன்பிறவா சகோதரரை இழந்து வாடுகிறோம்.

இருப்பினும் அவர் மறைந்தாலும் அவரது வீரத்தை தமிழக காவல்துறை வரலாறு என்றென்றைக்கும் சொல்லிக்கொண்டே இருக்கும். அவரை இழந்த தங்கள் குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறோம். உங்களுக்கு என்ன உதவி, எந்த நேரத்தில் தேவைப்பட்டாலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஏரல் காவல் நிலைய அதிகாரிகள், காவல்துறையினர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here