அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலைக்கடம்பூர் கிராமத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் ஊரைச்சுற்றி 9 இடங்களில்சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை இயக்கி தொடங்கி வைத்தார்.

260

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தில் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் பொருத்தப்பட்ட 9 கண்காணிப்பு கேமராக்களை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் இன்று இயக்கி வைத்தார்.

இந்த கேமராகள் மூலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள், ஊராட்சி மன்றத் தொடக்க பள்ளி, மெயின் ரோடு, ரயில்வே கேட், மாரியம்மன் கோவில் மற்றும் அம்பேத்கர் சிலை போன்ற முக்கியமான பகுதிகளை 24×7 கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌ பேசியதாவது: கிராமங்களில் திருட்டு அல்லது குற்ற செயல்புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு வருபவர்களின் நடமாட்டத்தை எளிதாக கண்டறிந்து, அவர்களை அடையாளம் காண மற்றும் அவர்களை பிடிப்பதற்கு மூன்றாம் கண்ணான சிசிடிவி கேமராக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கிராமங்களில் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் மேலும் அரியலூரை பாதுகாப்பான மாவட்டமாக மாற்றலாம்.மற்ற கிராம மக்களும் தங்கள் கிராமங்களை மேலும் பாதுகாப்பாக மாற்ற சிசிடிவி கேமராக்கள் பொறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில்
உலக.சாமிதுரை(சமூக ஆர்வலர்) ,ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அழகுதுரை ,ஊராட்சி மன்ற துணை தலைவர் சின்னதம்பி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here