
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல வாரிய” கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கான குறைகளை கேட்டறிந்து. அவர்களது குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து ‘ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல வாரியம்” அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பத்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கான நல வாரியம் அமைத்து அதற்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல வாரியத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ராமசாமி, ஸ்டெல்லா, உதவி ஆய்வாளர்கள் ஜெபமணி, சேதுராஜ், பால்ராஜ், ஞானசெல்வம், மாரியப்பன், ராமலிங்கம், சுப்பையா ஆகியோரும்
காவல்துறையில் பணியாற்றி வரும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மீஹா, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் பாண்டியன், தலைமை காவலர்கள் முருகேஸ்வரி, முத்துச்செல்வி ஆகியோரும் இந்த நலவாரியத்தில் அங்கத்தினர்களாக உள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்தார். அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். உங்களுக்கு எந்த குறைகள் இருந்தாலும் என்னிடம் தெரிவிக்கலாம். இல்லாவிட்டால் இந்த வாரிய காவல் ஆய்வாளர் மீஹா அவர்களிடம் தெரிவிக்கலாம்.
உங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த நல வாரியக்கூட்டம் மாதம் தோறும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல வாரியத்தைச் சேர்ந்த ஒய்வு பெற்றவர்கள் மற்றும் பணியிலுள்ள காவல்துறையினர்கள் கலந்து கொண்டனர்.