வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கைது.

170

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கைது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி அதிமுக வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பஞ்சர் கடை குப்புசாமி இவருக்கும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் செல்வி ரமேஷ் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவர் பதவியில் இருப்பதால் செல்வி ரமேஷுக்கும் குப்புசாமிக்கும் அடிக்கடி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றவே ஒரு கட்டத்தில் ஊராட்சித் தலைவர் செல்வி ரமேஷை சாதியின் பெயரைச் சொல்லித் திட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தலைவர் செல்வி ரமேஷ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குப்புசாமி மீது பிசிஆர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தார்.மனுவை விசாரித்த போலீசார் வழக்குபதிவு செய்த போதும் கைது செய்ய தாமதப்படுத்தினர் இதையடுத்து பல்வேறு தரப்பினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை குப்புசாமியை தாராபுரம் போலீசார் கைது செய்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்பு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அமர்ந்திருந்த குப்புசாமி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் சுருண்டு விழுந்தார் அதைகண்ட போலீசார் பதட்டம் அடைந்து அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு இதயம் சம்பந்தமான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்ந்து போலீஸ் காவல் போடப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here