குன்னூர் நீலகிரி மாவட்டம் காவல்துறை சார்பில் எளிய முறையில் பொதுமக்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகன் மிக எளிய முறையில்அணுகும் வகையில் இணையதள செயலியை மாவட்ட கண்காணிப்பாளர் திரு டாக்டர் வி சசிமோகன் அவர்கள் துவக்கி வைத்தார்
நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையை சான்ற உயர் அதிகாரிகளை எளிதில் காணவோ அவர்களின் புகார்களை அளிக்கவும் முடிவதில்லை என நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்ற, இதனால் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை மற்றும் புகார்களை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இடம் எளிய முறையில் கொண்டு சேர்க்கும் வகையில் செல்போன் இணைய தன செயலியை மாவட்ட கண்காணிப்பாளர் சசிமோகன் அவர்கள் துவக்கி வைத்தார்
இந்த செயலி மூலம் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் அல்லது மாவட்ட துணை கண்காணிப்பாளர் களுக்கு தங்களது பிரச்சினைகளை எளிய முறையில் கொண்டு செல்லும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது, காவல்துறை உருவாக்கப்பட்டுள்ளது,
நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதால் பல நாடுகளில் இருந்தும் நமது நாட்டில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு வழி மற்றும் பார்க்கிங் வசதிகள் எங்கே உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் , வகையில இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அவரவர் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் பார்க்கிங் செய்துகொள்ளலாம் அப்போது நீலகிரி மாவட்டத்தில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டது
அதனைத்தொடர்ந்து கோரானா காலத்தில் பொது போக்குவரத்து பணியில் உதவிகரமாக இருந்த தேசிய மாணவர் படை சார்ந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.